பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிகக் குறுகிய காலத்தில் ரத்து செய்யப்படும் - பாதுகாப்பு அமைச்சர் உறுதி!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிகக் குறுகிய காலத்தில் ரத்து செய்யப்படும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய அமைச்சர், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாகக் கூறினார்.
அதன்படி, மிகக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்திற்குத் தெளிவான மக்கள் அதிகாரம் கிடைத்துள்ளதாகவும், அடக்குமுறை, சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சி செய்யத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்துப் பேசினர். நாங்கள் நிச்சயமாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வோம். நீதி அமைச்சர் கூறியது போல், இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சட்டம் மிகக் குறுகிய காலத்தில் ரத்து செய்யப்படும். இந்த அடக்குமுறைகள், சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சி செய்ய நாங்கள் தயாராக இல்லை. எங்களிடம் நல்ல மக்கள் அதிகாரம் உள்ளது." என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே