இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும் கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர்.

ரிஷபம்

உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். திடீர் பயணங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும்.

மிதுனம்

நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடல் உபாதை இருக்கும். கவனம் தேவை. வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை. மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

கன்னி

திடீர் பணவரவு உண்டு. ஆன்மீகப் பணிகள் சிறக்கும்.காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். வியாபாரத்தில் போட்டியை வெல்வீர்கள். பூர்வ சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர்.

துலாம்

உறவினர்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முற்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

விருச்சிகம்

பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.

தனுசு

வீட்டில் சுபகாரிய முயற்சி வெற்றி அடையும். பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான நற்செய்தி கிடைக்கும். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம். இல்லையென்றால் முக்கிய விசயத்தில் கோட்டை விடுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

பெண்களுக்கு உஷ்ண பாதிப்பு ஏற்படும். குளிர்ந்த பொருட்களை உட்கொள்ளுதல் நன்மை தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.

கும்பம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர்.

மீனம்

பணம் தாராளமாக வரும். தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். உடல் நலம் நன்றாக இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4