இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

புதிய நம்பிக்கை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் குறையும். வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவி பயனளிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். வருமானம் படிப்படியாக உயரும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை. கடன் பிரச்சினைகள் குறையலாம். மன உறுதி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற காலம். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்லுறவு வளரும். பயண வாய்ப்புகள் உருவாகலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . பணத்திற்கு குறைவு ஏற்படாது. வாகனத்தில் கவனம் அவசியம். உடல்நலம் சீராக இருக்கும். தூக்கத்தை சரியாக பேணுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சமூக மதிப்பு உயரும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். வழக்குகளில் முன்னேற்றம் காணப்படும். நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். குடும்ப ஒற்றுமை மேம்படும். மனம் உற்சாகமுடன் இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக நடந்து கொள்வர். பங்குச் சந்தையால் பணம் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். சுப செய்தி கேட்க வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை வலுவடையும். சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

அரசியல்வாதிகளின் எண்ணம் பலிக்கும். சொத்துப் பிரச்சினை தீரும். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள் . தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உடல் நலம் நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி விடும் யோகம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து கூடும்.

சிம்மம்

திருமண பேச்சுக்கள் சாதகமாக அமையும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீடு தொடர்பான திட்டங்கள் நிறைவேறும். காதல் உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் நன்மை உண்டு. திடீர் வருமானம் கிடைக்கலாம். சேமிப்பு உயரும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மனநிம்மதி தரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நிலப்பதிவு செய்வீர்கள்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தேர்வில் நல்ல முடிவு கிடைக்கும். திருமண பேச்சுக்கள் சாதகமாக நகரும். காதல் உறவில் புரிதல் அதிகரிக்கும். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். வருவாய் திருப்தியளிக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும் .தங்கள் தேவை நிறைவேறும். நல்ல விசயங்களில் திருப்பம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் ஆர்வம் கூடும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு

சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய எண்ணங்கள் தோன்றும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர். உடல்நிலையில் பாதிப்பு வராது.

மகரம்

உத்யோகத்தில் மனநிறைவு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு பலப்படும். புதிய வீடு உற்சாகத்தினைத் தரும். நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து சிறப்பர். கணவன் மனைவியிடையே அன்பு மேலோங்கும்.

கும்பம்

உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வியாபார வளர்ச்சி காணப்படும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு உயரும். மேலதிக பொறுப்புகள் வரலாம். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

பயணங்கள் வெற்றிகரமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான காலம். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உண்டு. குடும்பத்தலைவிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பட்டா மாற்றுதல் நடைபெறும். மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4