பிரித்தானியாவில் நான்கு பாலஸ்தீன ஆர்வலர்களுக்கு சிறை தண்டனை
இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட நிறுவனத்தின் பிரித்தானிய கிளையில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிஸ்டல் நகருக்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து ஷார்லோட் ஹெட், சாமுவேல் கார்னர், லியோனா காமியோ மற்றும் பாத்திமா ரஜ்வானி ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களில் சாமுவேல் கார்னருக்கு, சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் காவல் துறை அதிகாரி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 7 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வாகனத்தை அத்தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓட்டிச் சென்ற ஷார்லோட் ஹெட்டிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லியோனா காமியோவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பாத்திமா ரஜ்வானிக்கு 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே