கொல்லூர் மூகாம்பிகை தேவி கோயிலுக்கு வெள்ளி வாளை காணிக்கையாக கொடுத்த முதல்வர் விஜய்
#India
#Tamil Nadu
#Temple
#Lanka4
#Vijay
#ChiefMinister
#L4
Prasu
10 hours ago
தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை தேவி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதற்காக, டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து, சாலை மார்க்கமாக கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய், 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராக இருந்துள்ளார்.
குறிப்பாக அவர், முதலமைச்சராக இருந்தபோது, மூகாம்பிகை அம்மனுக்கு ஒரு தங்க வாளைக் காணிக்கையாகச் சமர்ப்பிதிருக்கிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே