அத்தனகலு ஓயா ஆற்றை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

#SriLanka #LANKA4 #Warning #Flood #Disaster
Abi
23 minutes ago
அத்தனகலு ஓயா ஆற்றை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்! அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, 2026 நவம்பர் 9ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல், நவம்பர் 10ஆம் திகதி நண்பகல் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ள மழைவீழ்ச்சி காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அத்தனகலு ஓயா ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!