தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய இருவர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
15 hours ago
தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர.
ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ரதுபஸ்வல மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான கேபிள்களை துண்டித்து திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே