டலஸ், டிலான் புதிய நகர்வுக்கு தயார்; அரசியல் அரங்கில் பரபரப்பு!

#SriLanka #Dallas Alagaperuma #Lanka4 #Politics #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
டலஸ், டிலான் புதிய நகர்வுக்கு தயார்; அரசியல் அரங்கில் பரபரப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவு பிரதானி சுரேஷ் சலேயைப் பாதுகாக்கும் நோக்கில், ராஜபக்ச அணியின் முக்கியஸ்தர்களான டலஸ் அலஹப்பெரும மற்றும் டிலான் பெரேரா உள்ளிட்ட 9 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் நகர்வொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த 9 முன்னாள் எம்பிக்களும் இணைந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ஜே.வி.பி.யின் நிறுவனர் ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தையும், தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதையும் ஒப்பிட்டு வாதாடியுள்ளனர். 

மேலும், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் வாதிட்டுள்ளனர். எனினும், இவர்களின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனத் தெரியவந்துள்ளது. சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு நேரில் சென்ற நீதவான், அவரிடம் வாக்குமூலம் பெற்றபோது தனக்கு எந்தவித சித்திரவதைகளும் நடக்கவில்லை என்றே சலே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையிலும் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தடை செய்யப்பட்டு ரோஹண விஜேவீர கொல்லப்பட்ட நிகழ்வு, அவர் தொடுத்த தேர்தல் வழக்கை முடக்குவதற்கான சதியாகும்.

ஆனால் சுரேஷ் சலே 268 பேரின் உயிரைப் பறித்த ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் பிரதான சந்தேகநபராகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், டலஸ் அலஹப்பெரும, டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், பேராசிரியர் குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, டாக்டர் திலக் ராஜபக்ச, உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிரி ஆகியோரின் இந்த கூட்டு முயற்சி, ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை திசைதிருப்புவதற்கான ஒரு புதிய பிரசார யுக்தி என அரசியல் ஆய்வாளர்கள் சாடியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4