சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவு!
அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் (Asset Declarations) எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் கட்டாயமாக அபராதத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என விசேட அறிவிப்பொன்றையும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அபராதத் தொகை தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்திற்குப் பாரியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ்,இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தாமதப்படுத்துவது அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே