விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக CID விசாரணை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில  மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக CID விசாரணை!

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக ’குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

தற்போது தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு பாதகம் விளைவித்தல் மற்றும்  நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில்  மின்னணு ஊடகங்கள் வாயிலாகக் கருத்துக்களை வெளியிடுதல் தொடர்பிலேயே மேற்படி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய மேற்படி 06 பேரும் வரும் எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. 

எனினும், சம்பந்தப்பட்ட நபர்களை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்க வேண்டிய தேவை இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். 

அவர்களுக்கு எதிராக 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனங்களை அவமதித்தல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், சமர்ப்பணங்களுக்கு பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர, அந்த நபர்களை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கத் தேவையில்லை என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4