பாதாள உலகக்குழுவுடன் தொடர்பு : 15 வயது பாடசாலை மாணவர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 05 இலட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபரின் கைபேசியை ஆய்வு செய்ததில், "சமன் கொல்லா"வுடனான உரையாடல்களும், அவரால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அறிவுறுத்தல்களும் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே