பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் கொட்டி தீர்க்கும் மழை!! மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.
பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலமான காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே