பிரித்தானியா பிரதமர் ஸ்டாமர் பதவி விலக வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தல்

#PrimeMinister #Parliament #Resign #Lanka4 #England #Member #L4
Prasu
12 hours ago
பிரித்தானியா பிரதமர் ஸ்டாமர் பதவி விலக வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தல்

பிரித்தானியாவின் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பாரிய தோல்வியடைந்துள்ள நிலையில் பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் அவர் தனது இராஜினாமா தொடர்பான முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தொழிற்கட்சியில் தலைமைப் போட்டி நடைபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திற்குத் திரும்பி, தொழிற்கட்சித் தலைவருக்கு சவால் விடுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே G7 மாநாட்டில் பேசிய ஸ்டாமர் தனது போட்டியாளர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிப்பேன் என்றும், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தனது ஆணையைத் தொடர்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4