இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. நினைத்த காரியம் பலிக்கும். நீண்ட நாள் திட்டம் ஒன்று முன்னேறும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபச் செலவுகள் அதிகமாகும்.

ரிஷபம்

பணியில் சுறுசுறுப்பு காணப்படும். பிடித்தவர்களை சந்திப்பீர்கள். புதிய தகவல் ஒன்று கிடைக்கலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான உரையாடல் நடக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வேலைகளில் வேகம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும்.

மிதுனம்

எதிர்பாராத சந்திப்பு ஒன்று மகிழ்ச்சி தரும். சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். பண வரவு மிகும். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கை கூடி வரும். அலுவலகத்தில் உங்களை நம்பி சில பொறுப்புகள் வழங்கப்படலாம். தைரியமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

கடகம்

பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். சொகுசு வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மனநிறைவு ஏற்படும். வாடகைக்கு புது வீடு கிடைக்கும். வழக்கில் நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும்.

சிம்மம்

பணப் புழக்கம் மிகும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைக்கு படிப்பில் அக்கறை கூடும். நினைத்த வரண் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த அழைப்பு வர வாய்ப்பு உள்ளது. மனக்குழப்பம் குறையும். உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய யோசனை நல்ல பலன் தரும். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும்.

கன்னி

நண்பர்களுக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மாணவர்களுக்கு கவனம் அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உடல்நலம் சீராக இருக்கும்.முக்கிய வேலை ஒன்று நிறைவடையும். தேவையற்ற சிந்தனைகள் விலகும்.

துலாம்

பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வர். தம்பதிகளின் கருத்து வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத நன்மை கிடைக்கும். மனதில் தெளிவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிய அனுபவம் கிடைக்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உடல் சோர்வு குறையும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.

விருச்சிகம்

மனைவி வழியில் உதவிகள் உண்டு. பிடிவாதத்தை கட்டுப்படுத்துவீர்கள். வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளது புத்திசாலித்தனத்தை ஆசிரியர் மெச்சுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் உங்களை நம்பி பொறுப்பு வழங்கப்படலாம். நல்ல பெயர் கிடைக்கும். பயணத் திட்டம் உருவாகலாம். நண்பர்களுடன் நல்ல நேரம் அமையும்.

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

மகரம்

புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய திட்டம் உருவாகும். உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நடைபெறலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொலைந்து போன பொருள் கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். முக்கிய வேலை ஒன்று வெற்றிகரமாக முடியும்.

கும்பம்

புதிய அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படலாம். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பானவைகளில் நன்மை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மனநிறைவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். பணவரவுக்கு பஞ்சமில்லை. உடல் நிலை சிறப்புறும்.

மீனம்

உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தள்ளுபடியில் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். உங்கள் செயல்களில் முன்னேற்றம் காணப்படும். மனதில் இருந்த பயம் குறையும். குடும்பத்தில் சுப பேச்சு எழலாம். நல்ல செய்தி ஒன்று மகிழ்ச்சி தரும். உங்களைப் பற்றிய நல்ல கருத்துகள் பரவும். மாணவர்களின் கவனச்சிதறல் நீங்கும். உடல் மற்றும் மன உற்சாகம் கூடும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4