பயங்கரவாத குற்றச்சாட்டில் 6 பேரை தூக்கிலிட்ட ஜோர்டான்

#Court Order #people #Crime #Lanka4 #Jordan #execute #L4
Prasu
3 hours ago
பயங்கரவாத குற்றச்சாட்டில் 6 பேரை தூக்கிலிட்ட ஜோர்டான்

பாதுகாப்புப் படையினரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கு ஜோர்டான் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம், மரண தண்டனை பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த ஒன்பது ஆண்டு கால தடை முடிவுக்கு வந்தது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் இறப்பு மற்றும் காயங்களுக்கு வழிவகுத்த பயங்கரவாதம் மற்றும் குற்றவியல் வழக்குகளில் அந்த நபர்கள் தண்டனை பெற்றிருந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் முகமது மொமானி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர்களில் இருவர், 2018ம் ஆண்டு சால்ட் நகரில் நடந்த ஒரு சோதனையின் போது ஆறு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள்.

மற்றொருவர், 2022-ஆம் ஆண்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களின் போது ஒரு மூத்த காவல்துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர்.

மற்றவர்கள், 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த ஆயுத மோதல்களின் போது பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள்.

இந்நிலையில், ஜோர்டானில் 100க்கும் மேற்பட்டோர் இன்னும் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளதாகவும் தூக்கு தண்டனைகள் ஒவ்வொருவராக நிறைவேற்றப்படும் என்றும் முகமது மொமானி குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4