இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #Lanka4 #L4
Prasu
2 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே

மேஷம்

சூரியன், புதன் சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். 

நண்பர்களின் உதவி கிடைக்கும். பண விஷயங்களில் அவசரம் வேண்டாம். தெளிவாக சிந்தித்து செயல்பட்டால் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

பெற்றோரின் ஆலோசனைகள் நன்மை தரும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். உறவினர்களுடன் நல்லிணக்கம் உருவாகும். 

புதிய நபர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். பொதுவாழ்வில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் முன்னேற்றம் உண்டு. முன்னர் மேற்கொண்ட முயற்சிகள் இந்த காலகட்டத்தில் வெற்றி தரும்.

ரிஷபம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் நம்பிக்கை உருவாகும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் குறையும். நண்பர்கள் உதவியால் நின்ற வேலைகள் முடியும். பொதுவாழ்வில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் பொறுமையாக பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

மிதுனம்

புதன் பலமாக இருப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் நிலவிய மனக்குழப்பங்கள் குறையும். 

நண்பர்களின் உதவி மனநிம்மதியை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் ஆலோசனை முக்கிய நேரத்தில் உதவும். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். 

உறவினர்களுடன் பழைய பிரச்சினைகள் சரியாகும். அவர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய தொடர்புகள் உருவாகும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டுத்தொழிலில் பொறுமை அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு உருவாகும்.

கடகம்

சந்திரன் சாதகமாக இருப்பதால் மனநிம்மதி அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள். 

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகான பேச்சுவார்த்தைகள் சமூகமாக நடந்தேறும். பெற்றோரின் ஆசீர்வாதம் முக்கிய காரியங்களில் வெற்றி தரும்.

குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்களுடன் நல்லிணக்கம் உருவாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சூரியன் வலிமையாக இருப்பதால் தைரியம் அதிகரிக்கும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 

குடும்பத்தில் அமைதி உருவாகும். சிக்கலான சமயங்களில் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். உற்றார் உறவினர்கள் உங்களுடைய ஆலோசனையை கேட்டு நடப்பார்கள்.

பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தூரத்து உறவினர்களுடைய சந்திப்பு மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தும். 

உறவினர்களால் நன்மைகள் உண்டு. பொதுவாழ்வில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. 

கூட்டுத்தொழிலில் நிதானம் அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுமை தேவை. தொழிலில் பழைய முயற்சிகள் வெற்றி தரும்.

கன்னி

புதன் சஞ்சாரம் காரணமாக நம்பிக்கையும், தனித்திறனும் அதிகரிக்கும். இந்த வாரம் செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். மனதில் நிலவிய குழப்பங்கள் விலகும். 

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். புதிய செய்திகள் மனதிற்கு நிம்மதி தரும். குடும்ப உறவினர்கள் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்து கேட்கவும். 

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் அடையும். புதிய நபர்களுடைய வழிகாட்டுதல் நன்மை தரும். பொது விஷயங்களில் உங்களுடைய கருத்துக்களை கேட்டால் மட்டும் தெரிவிப்பது நல்லது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபம் தரும். தொழிலில் வளர்ச்சி மெதுவாக ஏற்படும். கூட்டுத்தொழிலில் வெளிப்படையான பேச்சு அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

துலாம்

சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனநிம்மதி அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிய மகிழ்விர்கள்.

உறவினர் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்வீர்கள். மூத்த சகோதர சகோதரிகளின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதம் மனதிற்கு நிம்மதியை தரும்.

சொந்த பந்தங்களுடன் நெருக்கம் அதிகமாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களுடைய முக்கியத்துவம் கூடும்.

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பொறுமை அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். 

வேலைப்பளு அதிகரித்தாலும் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகம் ஆகிய இரண்டு விஷயங்களிலும் உடனடி முடிவுகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்

ராசி அதிபதி செவ்வாய் சஞ்சாரம் காரணமாக மனதில் தைரியம் உருவாகும். பொருளாதார நிலையில் திருப்திகரமான வாரம் இது. மனதில் ஏற்படக்கூடிய கோபத்தை தவிர்க்க வேண்டும். 

குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் தங்கள் கல்வியில் சிறப்பு பெறுவார்கள். 

உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். கூட்டாளிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

தனுசு

ராசி அதிபதி அஷ்டமத்தில் உச்சம் பெற்று இருப்பதால் திடீர் நன்மைகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதே அளவு அதிகமாகும். 

குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியை ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

பெரியோர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசிர்வாதம் வெற்றியை தரும். பிள்ளைகள் வழியில் பல நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல விதமாக நடந்தேறும். 

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் புது முயற்சிகள் வெற்றி தரும்.

மகரம்

சனி சாதகமாக இருப்பதால் மெதுவான முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். செலவுகல் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

நண்பர்களின் உதவி கிடைக்கும். சமூக நிகழ்வுகளில் மரியாதை கிடைக்கும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். 

உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். பொதுவாழ்வில் உங்கள் மதிப்பு உயரும். வணிகத்தில் புதிய முயற்சிகள் கணிதம் ஆகும். 

தொழில் வளர்ச்சி மெதுவாக இருக்கும். தொழில் கூட்டாளிகளுடன் அதிகமாக பேச வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் சூழ்நிலை சமூகமாக இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

கும்பம்

சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்களின் காரணமாக மனதில் சிந்தனைகள் அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். 

நண்பர்கள் சரியான நேரத்தில் உதவிகரமாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

 வீட்டில் உள்ள பெரியோர்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். 

அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். புதிய ஒஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை பொறுமையாக நிதானமாக செய்து முடிக்க வேண்டும். எந்த நிலையிலும் அவசரம் வேண்டாம்.

மீனம்

ராசி அதிபதியின் பஞ்சம சஞ்சாரம் காரணமாக மனதில் நிம்மதி அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் கைக்கு வந்து சேரும். திடீர் செலவுகளை எப்படியாவது சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெற்றோர்கள் மட்டும் வீட்டில் உள்ள பெரியவர்களுடைய ஆசிர்வாதம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

குழந்தைகள் சம்பந்தமாக இருந்து வந்த கவலைகள் இந்த வாரம் விலகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியரமாக செயல்படுவார்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வேலை மாற்றம் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4