கனடாவில் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் விபத்து - மூவர் மரணம்
#Death
#Flight
#Canada
#Accident
#Lanka4
#L4
Prasu
3 hours ago
கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை செய்யும் 'டர்போ கமாண்டர் 690' ரகத்தைச் சேர்ந்ததாகும்.
யெல்லோநைஃப் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் சிம்ப்சன் என்ற இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் பிராந்திய மரண பரிசோதனைத் துறையும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே