கிளிநொச்சியில் போதைப்பொருள் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது

#SriLanka #Arrest #drugs #Robbery #Lanka4 #L4
Prasu
3 hours ago
கிளிநொச்சியில் போதைப்பொருள் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இரண்டு பெறுமதி மிக்க தொலைபேசிகள், வெளிநாட்டு நாணயத்தாள்கள் இரண்டு சமையல் எரிவாயு, 3 கிராம் ஜஸ் போதைப் பொருளையும் தர்மபுரம் பொலிசார் மீட்டனர். 

images/content-image/1782548383.jpg

images/content-image/1782548392.jpg

இதேவேளை, புன்னைநீராவி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் சோதனையிட்ட பொழுது 4 கிராமம் 520 மில்லி கிராம் ஹெராயின் குறித்த சந்தேக நபர்களிடம் காணப்பட்டதை அடுத்து நான்கு இளைஞர்களும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றி முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிநிலைய பொறுப்பதிகாரி திசாநாயக தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4