போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம் - ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!
#SriLanka
#CourtOrder
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை விவகாரங்கள் பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு அவரை கைது செய்திருந்தது.
இந்நிலையில் அவர் இன்று மாளிகாவத்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை ஜூன் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே