கிழக்கு பிரான்சில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் மரணம்
#Death
#Flight
#France
#Accident
#Lanka4
#L4
Prasu
1 hour ago
பிரான்சின் கிழக்கு நகரமான டோம்ப்லைனில் ஒரு சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்சி நகருக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக, மெர்த்-எட்-மொசெல்லே பிராந்தியத்தின் ஆளுநர் ஈவ்ஸ் செகுய் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விமானம் ஒரு பாராசூட் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமானது என்று உள்ளூர் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த ஐந்து மாணவர்கள், ஐந்து பயிற்றுனர்கள் மற்றும் விமானி உட்பட 11 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே