மனிதக் கடத்தல் மற்றும் கொலை குற்றங்கள் - பிள்ளையானுக்கு தொடர்ந்த விளக்கமறியல்!
பிள்ளையானை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைக்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட இருவர், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களம், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த மனிதக் கொலைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அறிக்கைகளை ஆய்வு செய்த நீதவான் வழக்கை வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே