சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்பான முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (30) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,965.87 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.47 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு, இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடையடையக் கூடுமென வர்த்தக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே