நள்ளிரவில் சோகம் : பேருந்தில் மோதிய முச்சக்கரவண்டி!! தாய், சேய் பலி!
காலி-கொழும்பு பிரதான சாலையில், பயகலாவின் கட்டுக்குருந்த பகுதியில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (01) நள்ளிரவு 12 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்த மேலும் இருவர் விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று, களுத்துறையிலுள்ள கட்டுக்குருந்த பிரதான பேருந்து நிலையத்தில் நின்று தனது பயணத்தைத் தொடர்ந்தபோது, அதற்கு முன்னால் வந்த முச்சக்கர வண்டி பேருந்தின் முன்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் உறங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே