இலங்கையின் வளர்ச்சிக்காக 150 மில்லியன் கடனை வழங்க உலக வங்கி ஒப்புதல்!
இலங்கையின் சீர்திருத்தம் மற்றும் மீள்திறன் திட்டத்திற்காக 150 மில்லியன் டொலர் கடனை வழங்க உலக வங்கியின் நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கடன் திட்டம் தொடர்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீட்டை ஊக்குவிக்கவும், போட்டித்திறனை வலுப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் வளர்ச்சி, மீள்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சீர்திருத்தம் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை தலைமையிலான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அவசியமான பொருளாதார ஆளுகை மற்றும் போட்டித்திறனை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் எனவும் உலக வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே