சொகுசு ஆம்புலன்ஸை முல்லைத்தீவு மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்த ஜனாதிபதி!

#SriLanka #Hospital #Mullaitivu #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
சொகுசு ஆம்புலன்ஸை முல்லைத்தீவு மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்த ஜனாதிபதி!

ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு நோயாளர் காவு (Ambulance) வண்டியொன்று, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கையளிப்பு நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது. முன்னதாக இந்த நோயாளர் காவு வண்டி ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிடம் (PSD) ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

எனினும், தற்போது இது உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், நாட்டின் சுகாதாரச் சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த வாகனத்தைச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் தீர்மானித்தது.

இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நலின் பிரேமதாசவிடம் இந்த நோயாளர் காவு வண்டி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) எச்.எம்.என். தினிப்ரிய ஹேரத், பணிப்பாளர் (போக்குவரத்து) முதித்த விமலசேன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4