கோட்டாபயவிற்கு ஆதரவு : பதவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக அலி சப்ரி, மஹிந்த தேசப்பிரியவிற்கு எதிராக குற்றச்சாட்டு!

#SriLanka #Gotabaya Rajapaksa #Complaint #Ali Sabri #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கோட்டாபயவிற்கு ஆதரவு : பதவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக அலி சப்ரி, மஹிந்த தேசப்பிரியவிற்கு எதிராக குற்றச்சாட்டு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சார்பாக தங்களின் பதிவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சில சான்றாதாரங்களுடன் முறைப்பாடு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,  முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுப் பணிப்பாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிராகவே  இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

 ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 41 வது பிரிவின் கீழ் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் தங்களது அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டவிரோதமான சலுகையையும் ஆதரவையும் வழங்கியுள்ளனர் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பெடரல் ரெஜிஸ்டர் (Federal Register) மூலம் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதற்கமைய  2019 ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றபோது  கோட்டாபய ராஜபக்ஷ  அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4