ஹட்டன் - கொழும்பு வீதியில் கன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்து:

#SriLanka #Colombo #Accident #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ஹட்டன் - கொழும்பு வீதியில் கன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்து:

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில் இன்று (03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற கன்ரர் வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நேரிட்ட சமயம் வாகனத்தில் ஐவர் பயணித்த நிலையில், காயமடைந்த நால்வர் உடனடியாக மீட்கப்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4