கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (04) 12 மணி நேர நீர் விநியோகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB), தெரிவித்துள்ளது.
கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலும், அத்துடன் பத்தரமுல்ல, பெலவத்த, ஹொக்கந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹன, மடிவெல, நுவகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகவத்த, அங்கோட, வெள்ளம்பிட்டிய, ஒருகொடவத்த, கடுவெல, மகாரகம, பொரளஸ்கமுவ, மற்றும் பிலியந்தல ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மேலும், தெஹிவலா, மவுண்ட் லவினியா, ரத்மலானா, மொரட்டுவ, ராவத்தவத்த மற்றும் சொய்சபுர ஆகிய இடங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படும்.
முல்லேரியாவ மின்கட்டமைப்பு துணை மின்நிலையத்தில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதால், இந்த நீர் வெட்டு அவசியமாகிறது என்று அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே