மண்டூர் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 51வது ஆண்டு நிறைவு மென்பந்து கிரிக்கெட் போட்டி கோலாகலமாக ஆரம்பம்!

#SriLanka #Lanka4 #Cricket #sports #Anniversary #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
மண்டூர் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 51வது ஆண்டு நிறைவு மென்பந்து கிரிக்கெட் போட்டி கோலாகலமாக ஆரம்பம்!

சங்கர்புரம் (மண்டூர் 13ஆம் கிராமம்) நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 51வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, போட்டியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கௌரவ காத்தமுத்து யோகராசா அவர்களும் கலந்து சிறப்பித்தார். அதேபோல், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலய அறங்காவலர் சபையினர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியளித்தது.

இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதோடு, சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்தும் ஆதரிப்பேன். 

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4