மாவடிப்பள்ளியில் கார் விபத்து: பள்ளிவாசல் முன்பாக மதிலை உடைத்து வளவுக்குள் பாய்ந்தது வாகனம்!
#SriLanka
#Accident
#Lanka4
#vehicle
#wall
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
காரைதீவு மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (05) இடம்பெற்ற விபத்தில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வளவின் மதிலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், காரின் முன்பகுதியும் வளவின் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே