அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதுவும் செய்யும் நிலை!! இதனாலேயே வடக்கில் யுத்தம் உருவானது : பேராயர்!

#SriLanka #Malcolm Ranjith #Politics #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Speech
Thamilini
3 hours ago
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதுவும் செய்யும் நிலை!! இதனாலேயே வடக்கில் யுத்தம் உருவானது : பேராயர்!

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய, சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கில் தேவையற்ற யுத்தம் உருவானதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

நேற்று அவர் தனது பிரச்சங்கத்தை நிகழ்த்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 இதன்போது மேலும் தெரிவத்த அவர்,நமது நாட்டின் அரசியல் உலகை உற்றுநோக்கினால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எந்தவொரு தவறான செயலையும் செய்யத் துணியும் நிலையையே காண முடிகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்த. 

 நாம் செய்யும் செயல் சரியானதா தவறானதா, சட்டப்பூர்வமானதா அல்லது பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எவருமே சிந்திப்பதில்லை. தற்போதைய சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை இந்த அரசியல் குறுக்கு வழிகளாகும்.

 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒரு தேர்தலை நடத்தி புதியதொரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். 

ஆனால், அதற்கு அடுத்த நாள் முதலே இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாம் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்ற குறுகிய அரசியல் வியாபாரமே இங்கு ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள், எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக்கட்டியெழுப்புவோம் என்று எவரும் சிந்திப்பதில்லை. எப்போதும் மற்றவர்களின் கால்களை இழுத்து வீழ்த்தவே பார்க்கின்றனர்.

 இதுவே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகும் நீதியும் நேர்மையும் என்பது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல சுலபமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

 தவறான செயல்களைச் செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மனச்சாட்சிக்கு இணங்க வேலை செய்யப் பழக வேண்டும். எனவே, வாழ்க்கையிலோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதிலோ குறுக்கு வழிகள் என்று எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4