பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட், பீச்சஸ் & ஐலண்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

#SriLanka #Central Bank #suspend #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Trading activities
Thamilini
4 hours ago
பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட், பீச்சஸ் & ஐலண்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

இலங்கை மத்திய வங்கி, பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட், பீச்சஸ் & ஐலண்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளது. 

அதன்படி, அந்நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் நேற்று மாலை 4.30 மணிமுதல் மேலும் 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் அவசரச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் அவசரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது. 

அந்நிறுவனத்திற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி நடத்தி வரும் விசாரணைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4