அலி கமேனியின் மரண சடங்கு : வான்வெளியை மூடியது ஈரான்!

#SriLanka #Airport #Iran #funeral #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Ayatollah Ali Khamenei
Thamilini
1 hour ago
அலி கமேனியின் மரண சடங்கு : வான்வெளியை மூடியது ஈரான்!

ஈரானில் மறைந்த தலைவர் அயெத்துல்லா அலி கமேனியின் மரணச் சடங்கை முன்னிட்டு அந்நாட்டின் வான்வெளியை  மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்றைய தினம் தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தின் வழக்கமாக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம் நாளை தினம் மெஹ்ராபாத் விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் எனவும், இமாம் கொமேனி விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​​

மேலும் மரண சடங்கின் இறுதி நாளானாஜூலை 9 ஆம் திகதி வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) வான்வெளியும், ஷாஹித் ஹஷேமிநெஜாத் சர்வதேச விமான நிலையத்தின் (hahid Hasheminejad International Airport) செயல்பாடுகளும் முழுமையாக இடைநிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4