நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் யாழ் சிறைச்சாலைக்கு இடமாற்றம்!
#SriLanka
#Jaffna
#Prison
#Negombo
#Transfer
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளில் 60 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் சுமார் 07 பொலிஸார் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆகவே கைதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வன்முறை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுரேஷ் என்பவர் அதியுச்ச பாதுகாப்பு சிறைச்சாலையான பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே