சுவிட்சர்லாந்தில் பார்முலா 1 சாம்பியன் அலெய்ன் ப்ராஸ்ட் வீட்டில் கொள்ளை - ஐவர் கைது

#Arrest #France #Switzerland #Robbery #Lanka4 #L4
Prasu
1 hour ago
சுவிட்சர்லாந்தில் பார்முலா 1 சாம்பியன் அலெய்ன் ப்ராஸ்ட் வீட்டில் கொள்ளை - ஐவர் கைது

சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ள ஜெனீவா ஏரிக்கரையில் வசிக்கும் நான்கு முறை ஃபார்முலா 1 உலக சாம்பியனான அலெய்ன் ப்ராஸ்டின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றவாளிகள் பிரான்சில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள், 16 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் இருவர் சிறார்கள் காரணமாக மீதமுள்ள மூவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தக் குழுவினர் மீது திருட்டு, ஆட்கடத்தல், சட்டவிரோத சிறைவைப்பு மற்றும் குற்றக் கும்பலில் பங்கேற்றல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4