நீதி அமைச்சரின் பொறுப்புக்கூறல் குறித்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு

#SriLanka #Parliament #Minister #Lanka4 #Justice #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
நீதி அமைச்சரின் பொறுப்புக்கூறல் குறித்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று (08) விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்த வாரத்தின் எஞ்சிய மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகள், விவாதங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. 

இதில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 7 சிறை அதிகாரிகள் உட்பட 26 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக தற்போதைய நீதி அமைச்சரின் பொறுப்புக்கூறல் மற்றும் கடப்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் சிறைச்சாலைத் துறையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், கைதிகளின் பாதுகாப்பு மற்றும் அதிகாரிகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற மரபுகளுக்கு இணங்க இந்த விடயத்தில் அரசாங்கத்தை எவ்வாறு பொறுப்புக் கூற வைப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4