இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.

ரிஷபம்

வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். தங்கள் வழக்கு சாதகமாகும். தீராத பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்கும். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள். உடலில் எலும்புப் பிரச்சினை தீரும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

மிதுனம்

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு வேலை கிடைக்கும்.

கடகம்

சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும். ஒரு சிலர் புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்

ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் சேருவர். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான். இன்று பணப் பிரச்சினை இருக்காது.

கன்னி

பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் பலிக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். அதற்குண்டான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

விருச்சிகம்

உங்கள் ரசனைக் கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட கால கனவு நனவாகும்.உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

தனுசு

சுபச் செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

மகரம்

சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். மாணவர்கள் அடிக்கடி விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள்.

கும்பம்

பண வரவிற்கு குறைவில்லை. திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும். இன்று மன அமைதி உண்டாகும்.

மீனம்

பழைய வாகனம் நல்ல விலைக்கு விற்பீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பொறுமை அவசியம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4