வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்ய வாய்ப்பு!

#SriLanka #weather #Rain #Meteorology #ADDA #ADDAPOOJA
Thamilini
2 hours ago
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்ய வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழைக்கு பகுதிகளை தவிர்த்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையே நிலவும என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்   மழை பெய்யக்கூடும். 

அதேபோல் மேல்மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை. திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது  கொந்தளிப்பாகக் காணப்படும்.

 கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4