நிலக்கரி கொள்வனவு முறைகேடு: 72 பேரிடம் விசாரணை நிறைவு – டிசம்பரில் அறிக்கை!

#SriLanka #Investigation #LANKA4 #President #AnuraKumaraDissanayake #inquiry #Commission
Abi
26 minutes ago
நிலக்கரி கொள்வனவு முறைகேடு: 72 பேரிடம் விசாரணை நிறைவு – டிசம்பரில் அறிக்கை!

இலங்கையின் நிலக்கரி இறக்குமதி மற்றும் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு தனது விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.

இதுவரை 72 முக்கிய அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்துக்கான நிலக்கரியின் தரம், கொள்வனவு நடைமுறைகள் மற்றும் இதனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விசாரணைகளின் இறுதி அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாத முற்பகுதியில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலக்கரி கொள்வனவு சர்ச்சையைத் தொடர்ந்து முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இதற்கிடையில், நிலக்கரி கொள்வனவு முறைகேடுகளால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்புக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையும், விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்படவுள்ள பரிந்துரைகளையும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!