மூன்றாம் கட்ட நடவடிக்கையாக பஹ்ரைன் மற்றும் குவைத்தை தாக்கிய ஈரான்!
#SriLanka
#Kuwait
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Bahrain
Thamilini
3 hours ago
பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தெரிவித்துள்ளது.
இதற்கமைய குவைத்தின் அலி அல்-சலேமில் உள்ள அமெரிக்கத் தளத்தில், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் எரிபொருள் தொட்டிகளை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அஹ்மத் அல்-ஜாபர் தளத்தில் உள்ள ரேடார் அமைப்பையும் அழித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தில், அமெரிக்க இராணுவத்தின் ட்ரோன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதே தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் மையங்களையும், பி-8 விமானக் கொட்டகையையும் குறிவைத்ததாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மேலும் குறிப்பிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே