எல்நினோ வானிலையால் நீர் குறைவடையும் சாத்தியம் - நீரை சிக்கணமாக பயன்படுத்துக!

#SriLanka #water #heat #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #El Nino
Thamilini
1 hour ago
எல்நினோ வானிலையால் நீர் குறைவடையும் சாத்தியம் - நீரை சிக்கணமாக பயன்படுத்துக!

நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை காரணமாக நீரின் கொள்ளளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்காரணமாக மக்கள் நீரை வீண்விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது தங்களது மொத்தக் கொள்ளளவில் 48 சதவீத நீரையே கொண்டுள்ளது. 

தற்போதைய நீரின் அளவு, வரவிருக்கும் பெரும்போக பருவ கால விவசாய நடவடிக்கைகளுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் போதுமானதாக இருக்கும்.

இருப்பினும், 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றத் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி நிலையால்  நீர் நிலைகளில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஆகவே  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கிடைக்கப்பெற்றுள்ள நீரை வீணடிக்காமல் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4