பிரான்சில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

#Police #France #people #Weapons #lanka4_news #L4 #Jewish
Prasu
4 hours ago
பிரான்சில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

பிரான்ஸில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இராணுவ தரத்திலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பாரிஸின் வடக்கே உள்ள சார்செல்ஸ் (Sarcelles) பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இராணுவத் தரத்திலான ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் பயங்கரவாத செயலாக வகைப்படுத்தப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்த வாகனத்தில் இருந்து தாக்குதல் ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4