பிரான்ஸ் செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுப்பு
பிரான்ஸ் செல்லும் கனேடியர்களுக்கு கனடா, பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
பிரான்சில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரான்ஸ் அரசாங்கமே அறிவித்துள்ளதால், அங்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு கனடா அறிவுறுத்தியுள்ளது.
பிரான்சில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், ஈபிள் கோபுரம் சீக்கிரமாக மூடப்படுவது, விழாக்களின்போது வாணவேடிக்கைகளுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் விதிக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு எடுத்துவருகிறது.
காட்டுத்தீ அபாயம் நிலவுவதால், வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் போன்ற இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனேடியர்கள் தங்கள் பாஸ்போர்ட் போன்ற விடயங்களை தனியாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் பாஸ்போர்ட் நகல் ஒன்றை தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் வைத்துக்கொள்ளுமாறும் கையில் அதிக அளவில் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே