பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் போலி போலீஸ் மோசடி
#Police
#Switzerland
#Lanka4
#Warning
#money
#Fraud
#Fake
#L4
Prasu
3 hours ago
பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்டோர் போலி போலீஸ் கும்பல்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். மொத்த இழப்பு சுமார் 1.8 கோடி சுவிஸ் பிராங்குகள் (18 million CHF) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த மோசடிகளில் குற்றவாளிகள் தொலைபேசியில் தங்களை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
- பின்னர் பணம், வங்கி அட்டை அல்லது நகைகளை எடுத்துச் செல்ல வீட்டிற்கு ஒருவரை அனுப்புகின்றனர்.
- பெரும்பாலும் வயதானவர்கள் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சுவிஸ் போலீஸ் எச்சரிக்கை:
- போலீஸ் ஒருபோதும் தொலைபேசியில் உங்கள் வங்கி விவரங்களை கேட்காது.
- வீட்டிற்கு வந்து பணம், வங்கி அட்டை, நகை வாங்க மாட்டார்கள்.
- யாராவது அழுத்தம் கொடுத்தால் உடனே அழைப்பை நிறுத்துங்கள்.
- சந்தேகம் இருந்தால் 117 (சுவிஸ் போலீஸ் அவசர எண்) அழைக்கவும்.
குறிப்பாக பேர்ன், சூரிச் போன்ற ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளிலும் இந்த வகை மோசடிகள் பதிவாகியுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே