போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பிரபல பாடசாலையின் ஆசிரியர் மற்றும் அவரது கணவர் கைது!
#SriLanka
#ARREST
#drugs
#Teacher
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
போதைப் பொருளை பதுக்கிய குற்றச்சாட்டின்பேரில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இணைந்து சுமார் 20 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இந்த தம்பதியினர் சில காலமாக இந்தப் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித் இருவரும் இன்றைய தினம் மாளிகாவந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்ட நிலையில், நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே