கனடாவின் மிசிசாகாவில் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் மரணம்
#Death
#Canada
#Accident
#Road
#Lanka4
#L4
Prasu
2 hours ago
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள 401 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
டிக்ஸி வீதிக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பின்னாலிருந்து வந்த வாகனம் ஒன்று மோதியதில், முன்னால் சென்ற வாகனத்தில் பயணித்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் 53 வயது பெண் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்ற மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து மிசிசாகா பகுதியில் உள்ள விரைவுப் பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே