உலகக் கிண்ண போட்டியில் தோல்வி காரணமாக பிரான்சில் கலவரம்

#Arrest #France #Lanka4 #WorldCup #FIFA #Riots #L4
Prasu
2 hours ago
உலகக் கிண்ண போட்டியில் தோல்வி காரணமாக பிரான்சில் கலவரம்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து நாட்டில் கலவரம் வெடித்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. 

கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்ற பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பின்னர் அந்நாட்டின் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

தோல்வியால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனங்களைச் சேதப்படுத்தி, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4