தெற்கு மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

#Earthquake #Mexico #Lanka4 #tsunami #Warning #L4
Prasu
4 hours ago
தெற்கு மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோவின் தென்கோடி மாநிலமான சியாபாஸின் கடற்கரைக்கு அருகே 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்துள்ளன. உடனடியாக எந்த ஒரு உயிர் அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் 15.2 கி.மீ (9.44 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. முன்னதாக, 10 கி.மீ ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அது மதிப்பிட்டிருந்தது.

இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கி.மீ (186 மைல்கள்) தொலைவிற்குள் உள்ள கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. 

மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் சில கடற்கரைகளில், இந்த அலைகள் கடல் மட்டத்திலிருந்து 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை உயரத்தை எட்டக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4