பிலியந்தலையில் பொலிஸ் சோதனையின்போது துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Police #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
19 hours ago
பிலியந்தலையில் பொலிஸ் சோதனையின்போது துப்பாக்கிச்சூடு!

பிலியந்தலவின் வீரசிங்க மாவத்த பகுதியில், இன்று காலை இரு சந்தேகநபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 போதைப்பொருள் தொடர்பான சோதனையின்போது  இந்த  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டடதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  இருசக்கர வாகனத்தில் பயணித்த சந்தேகநபர்களை  நிறுத்தி சோதனையிட அதிகாரிகள் முயன்றபோது, ​​சந்தேக நபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்றுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சந்தேக நபர் காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 இருசக்கர வாகனத்தில் பயணித்த மற்றொரு நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4