கனடாவில் சாலை விபத்தில் இந்தியர் உட்பட இருவர் மரணம்

#Death #CANADA #Accident #LANKA4 #Indian #L4
Prasu
2 months ago
கனடாவில் சாலை விபத்தில் இந்தியர் உட்பட இருவர் மரணம்

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11ல், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.

அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். 

அவரது பெயர் 30 வயது ஜேடன் . ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர் என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், 22 வயது பீஷ்மா ராஜ்யகுரு என்னும் இந்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!